Skip to content

கரிசல் தமிழ்

“தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும்” – பன்னாட்டுக் கருத்தரங்கம்

“தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும்” என்ற பொருண்மையில் நடைபெற்ற எமது தமிழ்த்துறையின் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு பாரதி ஆர்வலர் அய்யா இளசை மணியன், தூத்துக்குடி, ஏ..பி.சி.எம்.கல்லூரி பேராசிரியர் முனைவர். சுப்புலட்சுமி, திருச்சி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் மற்றும் சென்னை, மனித வளத்துறை உயர் மேலாளர் முனைவர். இருதயராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். கல்லூரி முதல்வர் முனைவர். த. பயஸ் மிசியர் அவர்கள் தலைமையில் நடந்த இக்கருத்தரங்க நாளன்று “தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும்” என்ற ஆய்வுக் கோவையை முதல்வர் அவர்கள் வெளியிட தமிழ்த்துறைத் தலைவர். முனைவர். சு.ஜெயந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

முத்தமிழ் மன்ற விழா

11 ஜனவரி 2020 அன்று முத்தமிழ் மன்ற சிறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் த. பயஸ் மிசியர் அவர்களது தலைமையில் நடந்த இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வீரபண்டிய பட்டினத்தைச் சார்ந்த அருட்தந்தை வளனரசு, எப்போதும்வென்றான் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உயர்திரு இராமசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தொன்மங்களைத் தேடிய பயணம்

27, 28 ஜுலை 2019 ஆகிய இரு நாட்களும், தமிழ்த்துறையின் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணாக்கர்கள் தொன்மங்களைத் தேடிய பயணமாக மதுரையிலுள்ள கீழடியில் ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வினையும், நாயக்கர் மஹால் மற்றும் தஞ்சையிலுள்ள பெரியகோவில், சரபோஜி மன்னர் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம் போன்ற இடங்களை பார்வையிட்டு வரலாறு சார்ந்த கள ஆய்வு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர்.