Skip to content

Department of Tamil (தமிழ்த்துறை)

தமிழ் இலக்கியம் - (2017 – 2018)

வணக்கம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட, முண்டாசுக் கவிஞன் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள கீழஈரால் என்ற ஊரில், தொன் போஸ்கோவின் சலேசியர்களால் சீர்மிகு வழியில் நடத்தப்பட்டு வருவதுதான் எமது தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இறைப்பணியோடு கல்விப் பணியையும் இணைத்து செய்து வரும் எமது கல்லூரி சலேசியக் குருக்களின் ஆறாத் தமிழ்ப் பற்றால், 2016 -2017 ஆம் கல்வியாண்டில் எமது கல்லூரியின் செயலர் தந்தை அமலதாஸ் அடிகளார் அவர்களின் முயற்சியினாலும், முதல்வர் தந்தை முனைவர். அமல ஜெய ராயன் அவர்களது வழிகாட்டுதலினாலும் தமிழ் இலக்கியத் துறையை கல்லூரியின் ஏழாவது பாடப்பிரிவாக இணைப்பது என்று திட்டமிடப்பட்டு 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் "தமிழ் இலக்கியப் பாடப் பிரிவு" எமது கல்லூரியில் தோற்றுவிக்கப்பட்டது.

எமது நோக்கம்: தமிழ் மொழியை தெளிவு பெறக் கற்பதும், மெருகூட்டி மாணாக்கர்களுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதும்.

நோக்கம் எய்தும் இலட்சியப் போக்கு:
ஏழை எளியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பணிபுரிய வேண்டும் என்கிற எமது சலேசியர்களின் கொள்கைகளுடன், நாகரிகம் என்ற பெயரில் நாகரிகமற்றுப் போய்க் கொண்டிருக்கும் எமது தமிழ் மொழியின் முதன்மைச் சிறப்பினை அறிந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும், எமது தாய் மொழியின் தொன்மையினை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுமே எமது தமிழ் இலக்கியத் துறையின் நோக்கம். எமது நோக்கத்தினை அடையும் எண்ணத்தில், மாணவர்களுக்கு இலக்கணப் பிழையின்றி எழுதவும், உச்சரிப்புத் தெளிவுபட பேசவும் கற்பிப்பதும், தூய தமிழில் புதிய படைப்புகளை உருவாக்கும் எண்ணங்களைத் தூண்டி ஊக்குவிப்பதும், தமிழ் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் எமது மாணவர்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் வழிகாட்டி, அவர்களது வளம் நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் எனப் பல்வேறு வழிகளில் மாணாக்கர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வருகின்றோம்.

Dr. S. Jayanthi M.A., Ph.D : HOD
Rev. Fr. Thomas M.A., M.Phil.,NET. : Asst. Prof
Rev. Fr. Susai M.A., M.Phil. : Asst. Prof
Ms. S. Theiva Rathina MA.M.Phil., (Ph.D) : Asst. Prof
Mr. M. Paulraj. M.A., M.Phil., NET., : Asst. Prof
Mr. T. Vigneswaran M.A., M.Phil., NET., (Ph.D) : Asst. Prof
Mr. V. Ananthan M.A., M.Phil., NET., (Ph.D) : Asst. Prof
Mr. M. Vinoth M.A., M.Phil., NET., : Asst. Prof

Sample Description